தென்காசி; சங்கரன்கோவிலில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயண சுவாமி கோயில் பிரசித்தி பெற்றதாகும். சிவனும் ஹரியும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் நடக்கும் ஆடித்தபசு விழா நடக்கிறது.
இந்த ஆண்டு ஆடித்தபசு விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக 3:00 மணிக்கு நடைதிறக்கப்ட்டது. 3:30 மணிக்கு திருவனந்தல் பூஜை நடந்தது தொடர்ந்து காலை 6:15 மணிக்கு மேல் அம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்ற வைபவம் நடந்தது. தொடர்ந்து 12 நாட்கள் இவ்விழா நடக்கிறது. விழாவையொட்டி தினமும் கோமதி அம்மன் காலையில் வெவ்வேறு அலங்காரங்களில் வீதி உலா நடக்கிறது. வரும் 29ம் தேதி காலை 10:30 மணிக்கு தேரோட்டமும், முக்கிய நிகழ்வான ஆடித்தபசு காட்சி வரும் 31ம் தேதி மாலை 6:30 மணிக்கும் நடக்கிறது. இன்று காலை கொடியேற்று விழாவில் திரளானவர்கள் பங்கேற்றனர்.