பதிவு செய்த நாள்
21
ஜூலை
2023
11:07
லக்னோ : உத்திர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலில், அடுத்தாண்டு ஜனவரியில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதையடுத்து, கட்டுமானப் பணிகள் வேகமெடுத்துள்ளன.
கடந்த, 2020 ஆக.,5ல் ராமர் கோயில் கட்டுமானத்தை பூமி பூஜையுடன், பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அதன்பின், கோயில் கட்டுமான பணிகள், முழு வீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு ஜனவரியில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதையடுத்து, கட்டுமானப் பணிகள் வேகமெடுத்துள்ளன. தற்போது, கோயிலின் தளம் கட்டும் பணிகள் நடந்து வரும் நிலையில், அடுத்தாண்டு ஜனவரிக்குள், கோயில் கட்டும் பணிகள் முழுதுமாக முடிக்கப்படும்.