ராமேஸ்வரம் ஆடித்திருவிழா; இன்று இரவு சுவாமி, அம்மனுக்கு திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2023 12:07
ராமேஸ்வரம்: ஆடித்திருவிழாவை யொட்டி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வ ரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு நேற்று மாலை மாற்று வைபவம் நடந்தது. இன்று (ஜூலை 24) திருக்கல்யாணம் நடக்கிறது. ராமேஸ்வரம் ராமநாதசு வாமி கோயிலில் ஆடித்திருக்கல்யாண விழா ஜூலை 13ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. 11ம் நாள் திருவிழாவான நேற்று காலை 6:20 கோயிலில் இருந்து பர்வதவர்த்தினி அம்மன் வெள்ளி கமல வாகனம், காலை 11:00 மணிக்கு தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி, தபசு மண்டகபடியில் எழுந்தருளிய பின் மதியம் 2:40 மணிக்கு சுவாமி, அம்மனுக்கு மாலை மாற்று வைபவத்தை கோயில் குருக்கள் உதயகுமார் நடத்தினார். அதையடுத்து நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை 5:30 மணிக்கு சுவாமி, அம்மன் கோயிலுக்கு திரும்பியதும் நடைதிறந்து வழக்கமான பூஜைகள் நடந்தன. இரவு 7:00 மணிக்கு கோயிலில் அனுமன் சன்னதியில் ஆடித்திருக்கல்யாண நிச்சயதார்த்தம் நடந்தது. இன்று இரவு 7:30 முதல் 8:30 மணிக்குள் திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி, அம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.