அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2023 01:07
அழகர்கோவில்; அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
அழகர்கோவில், மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் இன்று (ஜூலை 24 ல்) கொடியேற்றத்துடன் துவங்கும் ஆடி பிரம்மோற்ஸவ விழா ஆக. 3 வரை நடக்கிறது. கள்ளழகர் கோயிலில் சித்திரைத் திருவிழாவிற்கு பின் ஆடிமாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்ஸவ விழாவும் தேரோட்டமும் சிறப்பு மிக்கது. கோயில் வளாகத்தில் உள்ள தங்கக்கொடி மரத்தில் இன்று காலை 10:00 முதல் 10:30 க்குள் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவில் சுந்தரராஜப் பெருமாள் அன்ன வாகனத்தில் எழுந்தருள்வார். தொடர்ந்து தினமும் சிம்மம், அனுமார், கருடன், ஷேச, யானை, குதிரை வாகனங்களில் எழுந்தருள்வார். ஜூலை 28 காலை 7:00 முதல் 7:30 மணிக்குள் கள்ளழகர், கோயில் வளாகத்தில் உள்ள சிவகங்கை சமஸ்தானம் மறவர் மண்டபத்திற்கு தங்கப் பல்லக்கில் எழுந்தருள்வார். ஆக.1 ல் 8:00 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுப்பர். ஆக. 3ல் உற்ஸவ சாந்தியுடன் ஆடித்திருவிழா நிறைவு பெறும்.