நபிகள் நாயகம் ஒருமுறை தம் மகள் வீட்டிற்கு சென்றார். அப்போது அவரது மருமகன் அலீயும் மகள் பாத்திமாவும் துாங்கிக் கொண்டிருந்தனர். ‘‘இரவுத் தொழுகைக்காக நீங்கள் இருவரும் எழவில்லையா’’ என அவர்களை பார்த்துக் கேட்டார். அப்போது அலீ, ‘‘எங்களது உயிர் அந்த இறைவன் கைவசத்தில் உள்ளது. ஆகவே அவன் எங்களை எப்போது எழுப்ப வேண்டுமென்று நாடுகின்றானோ அப்போது எழுப்புவான்’’ என்றார். இதைக்கேட்டவர் தனது தொடையில் அடித்துக்கொண்டு, ‘‘மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்’’ என்று கூறி அங்கிருந்து கிளம்பினார்.