தோழர்களிடம் பேசிக்கொண்டிருந்த நபிகள் நாயகம் வானத்தை நோக்கி, ‘‘மக்களிடம் இருந்து கல்வி விலகிப்போகும் நேரம் இது. இறைநெறியைப் பற்றிய அறிவு இல்லாமல் போகும் நேரத்தில்தான் இவ்வாறு நிகழும்’’ என்றார். உடனே ஸியாத் எனும் தோழர், ‘‘குர்ஆனை நாங்கள் ஓதுகிறோம். இவ்வாறு இருக்க நீங்கள் சொல்வது எப்படி நடக்கும்’’ எனக்கேட்டார். அதற்கு அவர், ‘‘உங்களை மதீனாவிலேயே புத்திசாலி என்றல்லவா நினைத்திருந்தேன். நீங்கள் இப்படி சொல்லலாமா. யூதர்கள் தவ்ராத்தை எத்தனையோ முறை ஓதுகிறார்கள். ஆனால் அதில் கூறப்பட்டிருக்கும் அறிவுரைகளின்படி அவர்கள் செயல்படுவதில்லை என்பதை நீங்கள் பார்க்கவில்லையா’’ என சொன்னார். அதாவது குர்ஆனை பொருளுடன் புரிந்து ஓதி, அதை செயல்படுத்த வேண்டும் என்பதையே அவர் கூறினார்.