இறைவனுக்கு 99 பெயர்கள் உள்ளன. அதில் ஒன்று சக மனிதனுக்கு இருக்கிறது என நினைத்தால், அவனுக்கு இணைவைத்து விட்டான் என்றே பொருள் உதாரணமாக அவன் படைப்பாளன். அவன் படைக்கும் தன்மை மனிதனுக்கு இருக்கிறது என்று நம்பினால் இது இணைவைப்பு. அவனை மட்டுமே வழிபட வேண்டும். அவனது படைப்புகளான வானவர்கள், துாதர்கள், நல்லடியார்கள், சூரியன், சந்திரன், கோள்களிடம் சென்று முறையிடக்கூடாது.