மறுமை நாள் என்பது ஒருநாள் வந்தே தீரும். அப்போது கீழ்க்கண்ட செயல்கள் நடைபெறும். * ஒவ்வொருவருடனும் இறைவன் நேரடியாகப் பேசி கணக்கு வாங்குவான். அங்கு பரிந்துரை செய்ய யாரும் இருக்கமாட்டார்கள். அவனை மறைத்துக் கொள்ளும் திரை எதுவும் அங்கு இருக்காது. * பரிந்துரை, உதவி செய்ய யாராவது உள்ளனரா என்று மனிதன் தன் வலப்பக்கம் பார்ப்பான். ஆனால் அவனது செயலைத் தவிர வேறெதுவும் அவனுக்குத் தென்படாது. * பிறகு முன்பக்கம் பார்வையை செலுத்துவான் மனிதன். அங்கு (தனக்கே உரிய பயங்கரங்கள் அனைத்துடனும் தென்படும்) நரகத்தை மட்டுமே காண்பான். எனவே நரக நெருப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள முயலுங்கள். பாதி பேரீச்சம் பழத்தை தர்மம் செய்தேனும்.