அரேபியாவில் பெண்களின் தாழ்ந்த நிலையை பார்த்து வேதனை அடைந்தார் நபிகள் நாயகம். இதை எவ்வாறு சரி செய்யலாம் என யோசித்தார். தனிமையை விரும்பி அருகில் உள்ள ‘ஹிரா’ என்னும் குகைக்கு, சில நாட்களுக்குத் தேவையான உணவை எடுத்துக்கொண்டு சென்றார். அங்கு இறைவனைப் பற்றிய சிந்தனையில் ஈடுபட்டார். அந்தச் சமயத்தில் மறைபொருளான பல விஷயங்கள் அவருக்கு புலப்பட்டன. அசரீரி வாக்குகள் வெளியாயின. பிரச்னைக்கு தீர்வும் கிடைத்தது.