அபூபக்கரிடம் கிழிந்த துணியையும் மக்கிப்போன எலும்பையும் எடுத்துக்காட்டி, ‘இதுதான் உலகம்’ என்றார் நபிகள் நாயகம். அதாவது மனிதர்களின் அலங்காரங்கள் அனைத்தும் விரைவில் கிழித்தெறியப்படும். அழகான உடல் விரைவில் எலும்புகளாக மாறும் என்பதை சிலேடையாகச் சொன்னார். மற்றொரு சமயம், ‘இம்மை என்பது இன்பமயமானது. இதை எப்படி அனுபவிக்கிறீர்கள் என்று பரிசீலனை செய்யவே, இறைவன் உங்களை உலகில் வாழச் செய்திருக்கிறான். அவன் உங்களின் செயலைக் கண்காணிக்கிறான். இஸ்ரவேலர்கள் இப்படித்தான் அவனது சோதனைக்கு இலக்கானார்கள். பரந்த மண்ணுலகம் அவர்கள் முன் விரிந்து கிடந்தது. ஆனால் அவர்கள் இந்தச் சோதனையில் தோல்விடைந்து விட்டார்கள். அலங்காரம், பெண்கள் மீது ஆசை என பொழுதுபோக்கில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர்’ என்றார்.