‘மனிதர்களே. உங்களை ஓர் ஆன்மாவில் இருந்து படைத்த இறைவனுக்கு பயப்படுங்கள். மேலும் அதே ஆன்மாவில் இருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். அவை இரண்டின் மூலம் உலகில் அதிகமான ஆண்களையும் பெண்களையும் பரவச் செய்தான். எனவே ரத்தபந்த உறவுகளை சீர்குலைப்பதில் இருந்து விலகி வாழுங்கள்’ மேற்குறிப்பிட்ட வசனத்தில் உறவுகளைக் குறிக்க ‘அல் அர்ஹாம்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘அர்ஹாம்’ என்பது ‘ரஹீம்’ என்ற சொல்லின் பன்மையாகும். இது ரத்தபந்த உறவுகளை குறிக்கும்.