ஆண்டாள் அவதரித்த நாள் ஆடிப்பூரம். இதனால் ஆடிப்பூரம் சிறப்பு பெற்றது. இதை வைணவப் பெரியவரான மணவாள மாமுனிகள் தம் உபதேச ரத்தின மாலையில் இப்படிச் சொல்கிறார்.
பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த திருவாடிப்பூரத்தின் சீர்மை – ஒருநாளைக்கு உண்டோ மனமே உணர்ந்து பார் ஆண்டாளுக்கு உண்டாகில் ஒப்பு இதற்கும் உண்டு
பெரியாழ்வாருடைய மகளாகிய ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூர நட்சத்திரத்தின் சிறப்பு வேறொரு நாளுக்கு உண்டோ? ஆண்டாளுக்கு சமமாக ஒருவர் உண்டென்றால் இந்த நாளுக்கும் சமமாக ஒரு நாள் இருக்கக்கூடும்.