தங்கத்தை புடமிட்ட பிறகும், வைரத்தை பட்டை தீட்டிய பிறகும் அதன் மதிப்பு அதிகமாகும். அதன் பின்னர் சிறந்த நகையாக உருவாகும் போது அதன் மதிப்பு மேலும் அதிகரிக்கும். ஆனால் கல்லையும் மண்ணையும் யாரும் புடமிடுவதில்லை. கண்ணாடி துண்டுகளை மெருகேற்றுவதில்லை. நீங்கள் புடம் போடப்பட்ட தங்கமாகவும், பட்டை தீட்டப்பட்ட வைரக்கல்லாகவும் மாறுவதற்கு அதிகமாகவும் உறுதியாகவும் உழையுங்கள்.