செம்பட்டி: ஆத்தூர் விலக்கு கோழிப்பண்ணை அருகே சமயபுரத்து எல்லை மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. சாட்டுதலுடன் துவங்கிய விழாவில் அம்மன் அழைப்பு, கரகம் வாலித்தல், ஊர்வலம் நடந்தது. ஏராளமானோர், பொங்கல் வைத்தல், முளைப்பாரி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். வாணவேடிக்கை, ஆன்மிக கலைநிகழ்ச்சிகள் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.