ஆடி வெள்ளி; கோயில்களில் அலைமோதும் பக்தர்கள்.. வேப்பிலை காரியை தரிசித்து பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2023 10:07
ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையையொட்டி, அம்மன் கோவில்களில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர்.
ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் அருள்மிகு ஜெயமாரியம்மன் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் வேப்பிலையால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அம்மன் காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பொள்ளாச்சி அருகேயுள்ள சூலக்கல் மாரியம்மன் கோவிலில், மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில், நின்று அம்மனை தரிசித்தனர். இதுபோன்று பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில், ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆனைமலைஆனைமலை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, சிறப்பு வழிப்பாடுகள் நடந்தது. இதில் பெண்கள் அதிகஅளவில் பங்கேற்று, இறைவழிபாடு செய்தனர். ஆனைமலை பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில், ஆடி மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வரத் துவங்கினர்.ஆனைமலை மாசாணியம்மன் கோவில், தெய்வகுளம் காளியம்மன் கோவில், செமணாம்பதி உதிர காளியம்மன் கோவில், நவமலை பத்ரகாளியம்மன் கோவில், கோட்டூர் கமல காமாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.