புதுச்சேரி: தட்டாஞ்சாவடி புனித பாத்திமா அன்னை ஆலய 58ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.புதுச்சேரி-கடலூர் மறைமாவட்ட பொருளாளர் அருமைசெல்வம் கொடியேற்றி துவக்கி வைத்தார்.வரும் 14ம் தேதி வரை தினமும் காலை 6 மணிக்கு திருப்பலியும், மாலை 5.30 மணிக்கு தேர் பவனி மற்றும் திருப்பலி நடக்கிறது.வரும் 13ம் தேதி காலை 7 மணிக்கு புதுச்சேரி-கடலூர் உயர் மறை மாவட்ட முதன்மை குரு அருளானந்தம் தலைமையில் திருவிழா திருப்பலியும், மாலை 5.30 மணிக்கு பங்குதந்தை லாரன்ஸ் தலைமையில் திருப்பலி மற்றும் சிறப்பு பெரிய தேர்பவனி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை, விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.