இடைச்செருவாய் முத்துமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2023 12:07
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் முத்துமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா, ஜூலை 21ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. தினசரி அம்மன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஜூலை 23ம் தேதி, கோவில் வளாகத்தில் அம்மனுக்கு, ஊரணி பொங்கலிட்டு பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். ஐந்தாம் நாள், பால்குடம் எடுத்துவந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று மாலை தீமிதி திருவிழாவையொட்டி, வெள்ளாற்றிலிருந்து சக்தி கலசம் எடுத்து வரப்பட்டது. மாலை 6.30மணிக்கு சக்திகலசம் ஊர்வலமாக வந்து, அக்னிகுழியில் இறங்கியது. தொடர்ந்து பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இடைச்செருவாய் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள், தீமிதி விழாவில் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.