சின்னாளபட்டி: சின்னாளபட்டி ராமஅழகர் கோயில் ஆடி சந்தனக்குட விழாவில், சந்தன கலய ஊர்வலம் நடந்தது.
இக்கோயில் சார்பில், ஆண்டுதோறும் ஆடி மாத பவுர்ணமியில் சந்தன குட விழா நடத்தப்படுகிறது. இந்தாண்டு விழாவிற்காக, ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். இன்று முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்குட விழா நடந்தது. முன்னதாக அக்கசாலை விநாயகர் கோவிலில் இருந்து, பிருந்தாவன தோப்பிற்கு சந்தனம் நிரப்பிய கலய ஊர்வலம் நடந்தது. கோயிலில் விழா குழுவினரின் காப்பு அகற்றப்பட்டு, அனைத்து கலயங்களில் இருந்த சந்தனம் தனி பாத்திரத்தில் சேகரிக்கப்பட்டது. அவற்றை கரைத்து, 18 படி கருப்பணசாமி கோயில் கதவு, அரிவாள், வேல் உள்ளிட்ட ஆயுதங்களுக்கு பூசினர். சிறப்பு மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. விழாவில் ராம அழகர்சாமிக்கு பதினாறு வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது.