பதிவு செய்த நாள்
02
ஆக
2023
11:08
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த யாக பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மானை தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி வர சித்தி வாராஹி அம்மனுக்கு மல்லிகை, முல்லை, தாமரை உள்ளிட்ட மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மன் முன் உள்ள, சர்ப்பம் மற்றும் சூலாயுதத்திற்கு பால்,பழம், பன்னீர், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோவிலில் உள்ள யாகசாலையில் உலக நன்மை வேண்டி பௌர்ணமி அஸ்வாரூட வாராஹி ஹோமம் நடந்தது. ஹோமத்தை வாராஹி டிரஸ்டின் தலைவர் சஞ்சீவி சாமிகள் நடத்தி வைத்தார். இதில் கோபால்பட்டி ,நத்தம், சாணார்பட்டி சுற்று வட்டாரத்தில் இருந்தும் பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.