பதிவு செய்த நாள்
05
ஆக
2023
08:08
சூலூர்: சூலூர் வட்டார கோவில்களில் ஆடி வெள்ளியை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.
ஆடி மாத மூன்றாவது வெள்ளிக் கிழமையை ஒட்டி, சூலூர் சிவன் கோவில், அத்தனூர் அம்மன் கோவில், காட்டூர் மாகாளியம்மன் கோவில், மேற்கு அங்காளம்மன், பெரிய மாரியம்மன், செங்கத்துறை மாகாளியம்மன், முத்துக்கவுண்டன்புதூர் மாகாளியம்மன், ராமாச்சியம் பாளையம் மாகாளியம்மன் கோவில், அப்பநாயக்கன்பட்டி சக்தி மாரியம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பக்தி பாடல்களை பாடி வேண்டினர். சூலூர் சிவன் கோவிலில், அம்மனுக்கு ஊஞ்சள் உற்சவம் நடந்தது. ராமாச்சியம் பாளையம் மாகாளியம்மன் கோவிலில் அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.