Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வினோத வழிபாடு; தலையில் தேங்காய் ... எங்களை காத்தருள்வாய் தாயே ... ஆடி வெள்ளியில் பக்தர்கள் பரவசம் எங்களை காத்தருள்வாய் தாயே ... ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சந்தன மாரியம்மன் ஆடி திருவிழா; கூடாரம் அமைத்து தங்கி விரதமிருக்கும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
சந்தன மாரியம்மன் ஆடி திருவிழா; கூடாரம் அமைத்து தங்கி விரதமிருக்கும் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

05 ஆக
2023
08:08

கமுதி: கமுதி அருகே கருங்குளம் கிராமத்தில் சந்தன மாரியம்மன் கோயில் ஆடி திருவிழாவை முன்னிட்டு வெளிமாவட்ட பக்தர்கள் காப்புகட்டி கூடாரம் அமைத்து தங்கி விரதம் இருந்து வருகின்றனர்.

கமுதி அருகே கருங்குளம் கிராமத்தில் சந்தன மாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா முன்னிட்டு வெளி மாவட்டங்களில் உட்பட 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து வருவது வழக்கம்.ஆடி திருவிழா முன்னிட்டு பக்தர்கள் ஆடி முதல் தேதியை காப்புகட்டி விரதம் இருந்து வருகின்றனர். சென்னை,மதுரை,விருதுநகர், சிவகங்கை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் காப்பு கட்டி கோயில் அருகே கூடாரம் அமைத்து தங்கிவிரதம் இருந்து வருகின்றனர். பக்தர்கள் கூறியதாவது, சந்தன மாரியம்மன் ஆடி திருவிழாவிற்கு கடந்த பலஆண்டுகளாக மாலை அணிவித்து நேர்த்திகடன் செலுத்தி வருகிறேன்.இந்தாண்டும் ஆடி முதல் தேதி மாலையிட்டு கோயில் அருகே கூடாரம் அமைத்து விரதம் இருந்து வருகின்றேன்.கோயிலின் விசேஷமாக மாலை அணிவித்து கோயில் அருகே தங்கி இருப்பதால் தங்களது நேர்த்திக்கடன் நிறைவேறும். தினந்தோறும் பக்தர்களின் பஜனை நிகழ்ச்சி நடைபெறும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் மாலை அணிவிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. ஆடி கடைசி வெள்ளிக்கிழமை ஆக.11 தேதி பக்தர்கள் அக்னிச்சட்டி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பின்பு சந்தன மாரியம்மனுக்கு பால் அபிஷேகம், சிறப்புபூஜைகள் நடைபெறும், என்றார். விழாவில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். குறிப்பாக கருங்குளம் கிராமமக்கள் தங்கி இருக்கும் வெளிமாவட்ட பக்தர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். திருவிழாவின் போது இன்னும் ஏராளமான பக்தர்கள் கோயில் அருகே கூடாரம் அமைத்து இரண்டு மூன்று நாட்கள் தங்கி இருந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர உற்ஸவம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar