இன்று ஆடிக்கார்த்திகை; கார்த்திகேயனை வழிபட கவலைகள் தீரும்.. அரோகரா சொல்ல அனைத்தும் கிடைக்கும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஆக 2023 08:08
ஆடிமாதம் அம்மனுக்கு உரியது என்றாலும் ஆடிக் கிருத்திகை முருகனுக்கு உரியது. முருகனின் கரத்தில் இருக்கும் வேல், சக்தி ஆயுதம் எனப்படும். அம்பிகையின் அம்சமே வேல் எனவும் சொல்வர். அதனால் சக்திதரனாகிய முருகனுக்கும் ஆடியில் ஒருநாள் சிறப்பானதாகிவிட்டது. கந்தனைக் கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால், கிருத்திகை தினமே கார்த்திகேயனுக்கு உரியதாகி விட்டது. ஆடிக்கிருத்திகை நாளில் முருக பக்தர்கள் காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும், பாலபிஷேகம் முதலியன செய்தும் ஆறுமுகனை ஆராதிப்பார்கள். பல கோயில்களில் முழுக்க முழுக்க மலர்களாலேயே அலங்கரிப்பதும் உண்டு. அம்மன் ஆலயங்களில் இது பூச்சொரிதல் என்றும், முருகன் கோயில்களில் மலர் முழுக்கு என்றும் அழைக்கப்படுகிறது. ஆடிக் கிருத்திகை வழிபாட்டால், தீயன யாவும் ஓடிப்போகும்; நல்லன எல்லாம் தேடி வரும் என்பது ஐதிகம்.