குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் இன்று காலை 10:00 மணிக்கு நடராஜர் சன்னதி முன்பாக 63 கலசங்களுடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. கோயில் குருக்கள் ரமேஷ்சிவாச்சார்யார் தலைமையில் பூஜைகள் துவங்கின. ஆ.பி.சீ.அ.கல்வியியல் கல்லூரி செயலர் ராமேஸ்வரன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து காலை 11:40 மணிக்கு யாகசாலையில் பூர்ணாகுதி நடந்து கலசங்கள் புறப்பாடாகியது. தொடர்ந்து உற்ஸவர்கள் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் மற்றம் மூலவர்கள் 63 நாயன்மார்களுக்கும் அபிஷேகம் நடந்தது. பின்னர் அனைவருக்கும் தீபாராதனை நடந்தது. ஆதீன ஓதுவார் மாசிலாமணி திருவாசகம்,திருமுறைகளை பாடினார். பின்னர் உட்பிரகாரத்தில் நால்வர் பிரகார வலம் வந்தனர். நாயன்மார்களில் ஒருவரான புகழ்துணை நாயனார் அவதரித்த கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு நாயன்மார்களுக்கு குருபூஜை நடந்தது.