திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர் குழு தலைவராக கருணாகர ரெட்டி பதவியேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஆக 2023 10:08
திருப்பதி : திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர் குழு தலைவராக திருப்பதி சட்டமன்ற உறுப்பினர் கருணாகர ரெட்டி இன்று பதவியேற்றார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தற்போதைய அறங்காவலர் குழுவின் பதவிக்காலம் திங்கட்கிழமையுடன் (நேற்று) முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து புதிய அறங்காவலர் குழு தலைவராக கருணாகர ரெட்டி இன்று பதவியேற்றார். இதற்கு முன் 2006 ஆவது ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகள் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக பணியாற்றிய அனுபவம் உள்ள கருணாகரன் ரெட்டி, தற்போதைய அறங்காவலர் குழுவில் உறுப்பினராகவும் இருந்து வந்தது குறிபிடத்தக்கது. முன்னதாக அவர் இன்று காலை திருப்பதியில் உள்ள தடையகுண்டா கங்கம்மா கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார். தொடர்ந்து அலிபிரி கோசாலையில் வழிபட்டார். நேற்றைய உண்டியல் காணிக்கை ரூ.4.69 கோடி ரூபாய்; திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அவர்கள் முடி காணிக்கை, உண்டியலில் காணிக்கை செலுத்தி வேண்டுதல் நிறைவேற்றி வருகின்றனர். இதில் ஒரே நாளில் 75,594 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். நேற்று காலை 15 காத்திருப்பு அறைகளை கடந்து, வெளியில் உள்ள வரிசையில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனர். அவர்களுக்கு 15 மணிநேரம் காத்திருப்பிற்கு பின்பு தரிசனம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், தர்ம தரிசனத்திற்கு, 15மணி நேரமும், 300 ரூபாய் விரைவு தரிசனத்திற்கு 3மணி நேரமும் பக்தர்கள் காத்திருந்தனர்.