வன தேவதைகளுக்கு படையல்; உடனே பெய்த மழை.. அம்மன் அருள் என மக்கள் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஆக 2023 11:08
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே ஆவிளிபட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழா 8ம் நாள் வன தேவதைகளுக்கு படையல் அளிக்கும் விழாவில் பாரம்பரிய முறைப்படி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சாணார்பட்டி ஆவிளிப்பட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழா கடந்த ஜூலை 18 சாமி சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக கடந்த வாரம் ஆகஸ்ட் 2 சாமி கரகம் பாலித்து, கண் திறத்தல், அக்னி சட்டி, மாவிளக்கு, கிடாய் வெட்டி பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து மாலை 80 அடி உயர கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவில் நேற்று 8ம் நாள் வன தேவதைகளுக்கு படையல் பூஜை மற்றும் அன்னதான விழா நடந்தது. இந்த பூஜை முடிந்தவுடன் அரை மணி நேரம் அப்பகுதியில் மழை பெய்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது ஒவ்வொரு ஆண்டும் திருவிழா முடிந்து 8ம் வன தேவதைகளுக்கு கிடாய் வெட்டி படையல் வைத்து பூஜை விழாமல் முடிந்தவுடன் அம்மன் அருளால் மழை பெய்வது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டும் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் அடித்து அந்த நிலையில் வன தேவதைகளுக்கு படையல் பூஜை நடந்த உடன் மழை பெய்தது அம்மன் அருளால் தான் இன மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.