பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் லட்சார்ச்சனை பூர்த்தி; ஆடி வெள்ளி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2023 10:08
பழநி: பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை நிறைவு பெற்று வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது.
பழநி முருகன் கோயிலின் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயில் ஆண்டுதோறும் ஆடி மாதம் லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடைபெறும். ஜூலை.17, ஆடி மாதம் முதல் நாளில் பெரியநாயகியம்மன் கோயிலில் மாலை சாயரட்சை பூஜைக்கு பின் லட்சார்ச்சனை துவங்கியது. இந்நிகழ்ச்சி ஆக., 10 வரை தொடர்ந்து நடைபெற்றது. இதில் ஜூலை 21ல் பெரிய நாயகி அம்மனுக்கு முத்தங்கி அலங்காரம், ஜூலை 28,ல் மீனாட்சி அலங்காரம், ஆக., 4ல் சந்தன காப்பு அலங்காரம், நேற்று (ஆக.,11)ஆடி லட்சார்ச்சனை பூர்த்தி வேள்வி நடைபெற்றது. இதில் பல மீட்டர் நீளமுள்ள சேலைகளை வேள்வியில் சமர்ப்பித்தனர். அம்மனுக்கு வேள்வியில் வைக்கப்பட்ட புனித நீர் அபிஷேகம் நடைபெற்றது. தங்க கவச அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதன்பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று இரவு வெள்ளித்தேரில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதில் கோயில் அதிகாரிகள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.