பதிவு செய்த நாள்
12
ஆக
2023
12:08
பொள்ளாச்சி;பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி அமணீஸ்வரர் கோவிலில், மஹாலட்சுமி ஹோமம், 108 கோமாதா பூஜை நடந்தது.
பொள்ளாச்சி விவேகானந்த சேவா மையம் சார்பில், உலக நன்மை வேண்டி மஹாலட்சுமி ஹோமம், 108 கோமாதா பூஜை, டி.கோட்டாம்பட்டி அமணீஸ்வரர் கோவிலில் நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு திருவிளக்கேற்றுதல், விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், வாஸ்துசாந்தி, கிராம சாந்தி, யாக மண்டப பூஜைகள் நடைபெற்றன. இரவு, 8:00 மணிக்கு திரவியாஹுதி, பூர்ணாஹுதி பூஜைகள் நடந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு லட்சுமி கணபதிஹோமம், மஹா சுதர்சன ஹோமமும், காலை, 9:15 மணிக்கு 108 திரவியாஹுதி, நிறைவாஹுதி, மஹா பூர்ணாஹுதி மற்றும் சோடச உபசார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, 108 கோ பூஜை, மஹாலட்சுமி மஹா யாக பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. கோ பூஜையில் பங்கேற்ற பக்தர்கள், மாட்டுக்கு மஞ்சள், குங்கும பொட்டு வைத்து, பழங்கள், அகத்திக்கீரையை வழங்கி வழிபாடு செய்தனர். மஹா மேருபீடம் சிவசண்முக சுந்தர அடிகளார் மற்றும் குருமஹா சன்னிதானங்கள், பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கினர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.