நத்தம் பெரியூர்பட்டி பூ மாரியம்மன் கோவில் மண்டல பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2023 01:08
செந்துறை, நத்தம் செந்துறை அருகே பெரியூர்பட்டி பூ மாரிஅம்மன் கோவில் கும்பாபிஷேக 48வது நாள் மண்டல பூஜை விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
நத்தம் செந்துறை அருகே பெரியூர்பட்டியில் உள்ள பூ மாரிஅம்மன் கோவிலில் கடந்த ஜூன் 25 கும்பங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தினமும் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகளும், அன்னதானமும் நடந்தது. நேற்று 48 வது நாள் மண்டல பூஜை விழா நடந்தது. முன்னதாக பூ மாரிஅம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவில் முன் யாகசாலை அமைக்கப்பட்டு 12 புண்ணிய கலசங்கள் வைத்து மகா கணபதி ஹோமம், கலச பூஜை, கலச அபிஷேகம், மகா தீபாரதனை உள்ளிட்ட பூஜைகள் செய்து, சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க மண்டல பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், செந்துறை ஊராட்சி தலைவர் சபரிமுத்து, மாவட்ட அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் தினேஷ் குமார் உள்ளிட்ட சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.