உலக யானைகள் தினம்; ஸ்ரீரங்கம் கோவில் யானைகளை வழிபட்ட பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2023 12:08
யானைகளை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆக., 12ல் உலக யானைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. வனப்பரப்பு குறைவது, யானைகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் பற்றாக்குறையும் யானைகள் அழிவுக்கு காரணமாகிறது. இதனால் தான் சில நேரங்களில் காடுகளை விட்டு சாலை, குடியிருப்பு பகுதிகளுக்கு யானைகள் வருகின்றன. ஆசிய யானைகளில் 44 சதவீதம் இந்தியாவில் உள்ளன. பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டாள் மற்றும் லட்சுமி ஆகிய இரு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. உலக யானைகள் தினமான இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் யானைகள் ஆண்டாள், லட்சுமியை பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.