தியாகதுருகம்: சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடிவெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.
தியாகதுருகம் அடுத்த சித்தலூர் மணிமுக்தா ஆற்றங்கரையில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில் நேற்று ஆடி வெள்ளியை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. கருவறையில் உள்ள பிரம்மாண்ட புற்றுக்கு மஞ்சள் காப்பு அபிஷேகம் செய்து மலர் அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து நடந்த மகாதீபாராதனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். கோயில் வளாகத்தில் பொங்கலிட்டு, மாவிளக்கு தீபம் ஏற்றி பெண்கள் வழிபாடு செய்தனர். வெளியூரில் இருந்து வந்த பக்தர்கள் பலர் குழந்தைகளுக்கு முடி நீக்கி, காது குத்தி குலதெய்வ வழிபாடு செய்தனர். ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.