பதிவு செய்த நாள்
14
ஆக
2023
04:08
காஞ்சிபுரம் : ஆடி மாத கடைசி ஞாயிறான நேற்று, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில், பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்தும், கூழ்வார்த்தும் வழிபட்டனர்.
பெரிய காஞ்சிபுரம், வெள்ளகுளம் தெரு, சந்தவெளியம்மன் கோவிலில், பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்தும், கூழ்வார்த்தும், கும்பம் படையலிட்டும் அம்மனை வழிபட்டனர். பெண்கள் நேர்த்திக் கடனாக வேப்பஞ்சேலை அணிந்து கோவிலை வலம் வந்தனர். இதேபோல, பரஞ்சோதியம்மன், தண்டுமாரியம்மன், கருக்கினில் அமர்ந்தவள் அம்மன், தும்பவனத்தம்மன், சிறுகாவேரிப்பாக்கம் பச்சையம்மன் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோவில்களில் கூட்டம் அலைமோதியதால், பக்தர்கள் நீண்டநேரம் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.