முன்னோரது ஆசியைப்பெற திதி, தர்ப்பணம் கொடுக்கிறோம். இதன் மூலம் நன்மைகள் கிடைக்கும். அவை, * பூலோகத்திலோ வேறு எங்கோ, எந்த ரூபத்திலோ பிறந்திருக்கிற மூதாதைகளுக்கு இது க்ஷேமத்தைக் கொடுக்கும். * இங்கே நாம் கொடுக்கும் எள், தண்ணீர், பிண்டம் ஆகியவை அவர்களுக்கு ஏற்படும் தாகம், பசியைப் போக்கும். பித்ரு தேவதைகள் இதற்கு உதவி செய்கிறார்கள். எப்படி என்றால் மூதாதைகள் எந்த ரூபத்தில் எங்கே பிறந்திருந்தாலும், அதற்கேற்ற ஆகாரமாக மாற்றி அங்கே கிடைக்கச் செய்து விடுவார்கள். * தர்ப்பணம் கொடுத்து வருபவரின் குடும்பம் சிறப்பாக வாழும்.