திவஸம், தர்ப்பணம் முதலான பித்ரு காரியங்களை நாம் செய்கிறோம். இதற்கான பலன்கள் பித்ருக்கள் எங்கே, எப்படிப்பட்ட பிறப்பு எடுத்திருந்தாலும் அவர்களுக்கு திருப்தியை கொடுக்கும். பொதுவாக ஒருவர் இறந்தவுடன் பித்ரு லோகம் செல்வதில்லை. மற்றொரு பிறப்பும் எடுப்பதில்லை. இறந்த ஜீவன் ஓர் ஆண்டு பயணம் செய்த பிறகே பித்ரு ஸ்தானத்தை அடையும். அந்தப் பயணத்தில் ஜீவன் வைதரணி என்னும் நதியைக் கடந்து எமலோகம் செல்லும். இப்படி ஒரு ஜீவன் பரலோகம் செல்வதற்கு ஓர் ஆண்டு எடுத்துக்கொள்ளும். எனவே அதன் திருப்திக்காக மாதம்தோறும் சில சடங்குகளைச் செய்து விரதம் இருக்க வேண்டும். இதன் மூலம் அவர்களது பயணம் இனிதாக அமையும்.