அபூ கிஸாமா என்பவரின் தந்தை, ‘‘நோய்கள் குணமாவதற்கு மருந்து சாப்பிடுகிறோம். துன்பத்தில் இருந்து விடுபட பிரார்த்தனை செய்கிறோம். இப்படி நாங்கள் மேற்கொள்ளும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இறைவனின் விதியைக் சிறிதாவது தடுத்திடுமா’’ என நபிகள் நாயகத்திடம் கேட்டார். அதற்கு அவர், ‘இவையனைத்தும் இறைவனின் விதியே ஆகும்’ எனக்கூறினார்.