ஒரு நாள் நபிகள் நாயகம் காபாவின் அருகில் தனியாக நின்று கொண்டிருந்தார். இதைப் பார்த்த குரைஷிகள் கயிற்றைக் கொண்டு அவரது கழுத்தை நெரித்தனர். அப்போது தற்செயலாக அங்கு வந்த அபூபக்கர், கஷ்டப்பட்டு அவரை விடுவித்தார். ஆனால் குரைஷிகள் அபூபக்கரை தாக்கியதால், அவர் மயக்கமடைந்தார். இதைக் கண்டவர்கள் அவர் இறந்துவிட்டதாக நினைத்து சென்றுவிட்டனர். இறைவனின் கருணையால் நீண்ட நேரம் கழித்து அவர் இயல்பு நிலைக்கு திரும்பினார்.