லுக்மானுல் ஹகீம் என்ற அறிஞர் தன் மகனிடம் கீழக்கண்ட அறிவுரையை கூறினார். உலகம் என்பது ஆழம் காண முடியாத பெருங்கடல். அதன் அழகான நீர்ப்பரப்புக்கு அடியில் எத்தனையோ பேர் ஆழ்ந்து விட்டனர். இந்தக் கடற்பயணம் வெற்றிகரமாக அமைய, ‘இறையச்சம்’ என்ற மரக்கலன் கைகொடுக்கும். கொந்தளிப்பு மிகுந்த இந்தக் கடலின் தீமையில் இருந்து நீ தப்ப விரும்பினால், இறைநம்பிக்கை ஒன்றே வழி. ‘மனிதருள் நல்லவர் யார் என்பதைப் பார்ப்பதற்காக இம்மையை நாம் அழகுப்படுத்தியிருக்கிறோம்’ என்கிறது குர்ஆன்.