ஒருசமயம் உடல்நலம் இல்லாமல் இருந்த தனது பெரிய தந்தை அபூதாலிப்பை பார்க்கச் சென்றார் நபிகள் நாயகம். அப்போது அவரிடம், ‘‘இறைவனிடம் என்னுடைய நோய் குணமாகும்படி நீர் பிரார்த்தனை செய்யக் கூடாதா’’ எனக்கேட்டார் அபூதாலிப். அவ்வாறே அவரும் பிரார்த்தனை செய்தார். பிறகு அவரிடம், ‘‘இறைவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடந்து கொண்டால், உங்களுடைய பிரார்த்தனையை அவன் அங்கீகரிப்பான்’’ என்று கூறினார். பின் அபூதாலிப் தன் குடும்பத்தினரை அழைத்து, ‘‘நீங்கள் அனைவரும் நாயகத்துடன் நட்புறவோடு நடந்து கொள்ள வேண்டும்’’ என அறிவுரை கூறினார்.