போரில் கைதானவர்களை அடிமைகளாக்கி அவர்களைப் பண்டமாற்றுப் பொருள்களைப் போல் விற்பனை செய்வது அரபு நாட்டில் அந்தக் காலத்தில் வழக்கமாக இருந்தது. ஒருசமயம் அடிமையான ஜைதுப்னு ஹாரிதாவை விற்பனை செய்ய சந்தைக்குக் கொண்டு வரப்பட்டார். அவரை ஹக்கீம் இப்னு ஹஸ்லாம் என்பவர் வாங்கி, தன் தந்தையின் சகோதரி கதீஜாவிற்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். அவரோ நபிகள் நாயகத்திடம் கொடுத்தார். தன்னிடம் வந்ததும் அடிமையை விடுவித்து, ‘‘நீங்கள் இங்கே இருக்க விரும்பினால் இருக்கலாம். இல்லை உம் விருப்பம் போல் சுதந்திரமாக எங்கே வேண்டுமானாலும் செல்லுங்கள்’’ எனக்கூறினார் நாயகம். இதனால் நெகிழ்ந்த அடிமையான ஜைதுப்னு அவரை விட்டு பிரிய மனமில்லாமல் அங்கேயே இருந்து விட்டார். . இந்த விஷயத்தை அறியாத ஜைதுப்னுவின் தந்தை அங்கு வந்தார். தன் மகனை அவர் விடுதலை செய்துவிட்டார் என்பதை அறிந்ததும் மகிழ்ச்சி அடைந்தார்.