ஒருவர் பணியாற்றும் போது அவருக்கு உதவி செய்பவர்கள் தங்களின் பங்களிப்பை, ‘ராமருக்கு அணில் உதவியது போல’ என்பார்கள். பிரசித்தி பெற்ற வால்மீகி, கம்பர், துளசிதாசர் ராமாயணங்களில் பாலம் கட்ட அணில் உதவிய செய்தி இடம்பெறவில்லை. ஆனால் இந்தியாவின் பல மொழிகளில் செவிவழிக்கதையாக இது இடம் பெற்றுள்ளது. தொண்டரடிப்பொடியாழ்வாரின் ‘திருமாலை’ என்னும் பாசுரத்தில் ராமருக்கு அணில் உதவியதாக பாடல் ஒன்று குறிப்பிடுகிறது.