அது ஒரு புகழ் பெற்ற கல்லுாரி. அங்கு தத்துவத்துறையில் அதிகமான மாணவர்கள் சேருவர். ஒருநாள் வகுப்பறைக்குள் அத்துறை பேராசிரியரும் நாத்திகவாதியான எல்லீஸ் நுழைந்தார். ‘ஆண்டவரை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா. அவர் பேச்சை கேட்டு இருக்கிறீர்களா அல்லது அவரை நேரில் பார்த்தவர்களையாவது பார்த்து இருக்கிறீர்களா’ என மாணவர்களிடம் கேட்டார். அவர் வெளியே சென்ற பிறகு ஒரு மாணவன் எழுந்து, ‘நமது பேராசிரியரின் மூளையை பார்த்துள்ளீர்களா, எப்போதாவது அது பேசியுள்ளதா. அதை நேரில் பார்த்தவர்களையாவது பார்த்து இருக்கிறீர்களா’ என கேட்டான். பதில் சொல்ல முடியாமல் பிற மாணவர்களும் அமைதியாக இருந்தனர். மேலும், ‘அவருக்கு மூளை இல்லை என சொன்னால் ஒத்துக் கொள்வாரா என்றான். இதை கேட்ட அனைவரும் சிரித்தனர்.