காடு ஒன்றில் புலியும் சிங்கமும் நண்பர்களாக வசித்து வந்தன. ஒருநாள் அவைகளுக்குள் விவாதம் எழுந்தது. பகலில் தான் குளிர் அதிகம் என புலி சொன்னது. அதற்கு பதிலாக இரவில் தான் குளி்ர் அதிகம் என சொன்னது சிங்கம். இருவரும் சேர்ந்து அறிஞர் ஒருவரிடம் எது சரி எனக் கேட்க சென்றனர். இருவர் சொன்னதையும் கேட்ட அவர், காற்று எப்போது அதிகமாக வீசுமோ அப்போது குளிர் அதிகமாகும். நீங்கள் இருவருமே சொன்னதும் சரி தான் என சொன்னார். காட்டிற்குள் மகிழ்ச்சியாக இரண்டும் சென்றன. சமாதானமாக இருந்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.