பசு ஒன்று தன் உரிமையாளருடன் செல்லும் போது நடுவழியில் படுத்தது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது. அவ்வழியாக வந்த போலீஸ்காரர். அந்தப் பசுவை மிரட்டியும் பார்த்தார். ஆனால் அது எழவில்லை. அப்போது அங்கு வந்த வீரர் ஒருவர் தன் பங்கிற்கு முயற்சித்தும், ஒன்றும் நடக்க வில்லை. இதை வேடிக்கை பார்த்த சிறுவன் ஒருவன், ஓடிச்சென்று பசுவிற்கு புல் கொடுத்தான். அது உடனே புல்லை சாப்பிட்டு விட்டு அங்கிருந்து நகர்ந்தது. போக்குவரத்தும் சீரானது. ‘பிரச்னைகளை பலம் காட்டி தீர்க்க முயற்சிக்காதீர்’