மாங்காயை திருடிய சிறுவர்களை ஊர் சபை முன் நிறுத்தினார் தோட்டக்காரர். அவர்களுக்கு அறிவுரை கூறி மன்னித்து விடலாம் என சொன்னார் சபைத்தலைவர். அவர்களை மன்னிக்கக்கூடாது என்றார் தோட்டக்காரர். அதைக்கேட்ட தலைவர், இங்குள்ளவர்களில் யாராவது சிறுவயதில் மாங்காய் திருடாமல் இருந்தீர்களா என கேட்டார். அங்கு அமைதி நிலவியது. பின் சிறுவர்களை பார்த்து திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு தருகிறேன் என சொன்னார் ‘திருட மாட்டோம், திருந்தி விட்டோம்’ என சத்தமாக சொன்னார்கள் சிறுவர்கள்.