இறை வெளிப்பாடு வந்தபிறகு நபிகள் நாயகம் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் அவரது தந்தையின் சகோதரர்களான அபூதாலிப், ஹம்ஸா, அப்பாஸ் முதலானோர் கலந்து கொண்டனர். சாப்பிட்டு முடித்த பின் நபிகள் நாயகம், ‘‘இம்மையிலும் மறுமையிலும் பயன்தரக்கூடிய சிறந்த விஷயங்களை நான் கொண்டு வந்துள்ளேன். இந்த நற்செயலுக்கு என்னுடன் இருந்து உதவி செய்பவர்கள் யார்?’’ எனக்கேட்டார். இதற்கு யாரும் பதில் கூறவில்லை. ஆனால் சிறுவன் அலி மட்டும், ‘‘உங்களுக்கு உதவியாக நான் இருப்பேன்’’ என்றான். இதைக்கேட்டவர்கள் பலரும் ஆச்சர்யப்பட்டனர். சிலர் சிரித்தனர்.