விண்வெளிக்கு சென்று சந்திரனில் கால்பதித்த விண்வெளி வீரர் இர்வின். இவர் ஒரு பக்திமான். அவரிடம், ‘உங்களது விண்வெளி அனுபவம் எப்படி இருந்தது’ என கேட்டார் நிருபர் ஒருவர். அதற்கு அவர், ‘சந்திரனில் இருந்து பார்த்தால் பூமி சிறியது. பூமியிலிருந்து நாம் வாழும் நாடு சிறியது. அதில் இருக்கும் என் வீடு சிறியது. அங்கு நான் வாழ்கிறேன். நம் மீது அன்பு காட்டும் ஆண்டவருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். அவர் முன்னால் நான் எம்மாத்திரம்’ என்றார் இர்வின்.