அன்னூர்: சாலையூர் பிராட்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும், 20ம் தேதி நடக்கிறது.
அன்னூர் அருகே சாலையூரில் பழமையான பிராட்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து இன்று (18ம் தேதி) காலை 6:00 மணிக்கு விநாயகர் வேள்வியுடன் கும்பாபிஷேக விழா துவங்குகிறது. மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதலும், காப்புக் கட்டுதலும் நடக்கிறது. நாளை (19ம் தேதி) காலை திருமஞ்சனமும், வேள்வி பூஜையும், திருமுறை விண்ணப்பமும், கோபுர கலசம் நிறுவுதலும் நடக்கிறது. இரவு 9:30 மணிக்கு எண் வகை மருந்து சாத்துதல் நடக்கிறது. வருகிற 20ம் தேதி அதிகாலையில் நான்காம் கால வேள்வி பூஜை நடக்கிறது. காலை 7:00 மணிக்கு பிராட்டியம்மன், வீரகுமாரசாமி, விநாயகர், முருகன், செல்லாண்டியம்மன், வீரமாத்தி அம்மன், கன்னிமார் மற்றும் கருப்பராய சாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. அனைவரும் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று இறையருள் பெற விழா குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.