சதுரகிரியில் 6 நாளில் 67 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஆக 2023 04:08
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவில், 6 நாட்களில் 67 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
கடந்த ஆக 12 முதல் 17 வரை 6 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதில் ஆக.12ல் 3 ஆயிரம், 13ல் பிரதோஷ நாளன்று 12 ஆயிரம், 14ல் 3 ஆயிரம், சுதந்திர தின விடுமுறை நாளன்று 14 ஆயிரம், ஆடி அமாவாசை நாளான ஆகஸ்ட் 16ல் 30 ஆயிரம், கடைசி நாளான நேற்று 5 ஆயிரம் என மொத்தம் 67 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். ஆகஸ்ட் 15 மதியம் முதல் ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினர், உறவினர்களுடன் தாணிப்பாறை மலை அடிவார தோப்புகளில் தங்கி ஆடி அமாவாசையன்று நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்துவிட்டு, நேற்று மாலை தான் தோப்புகளில் இருந்து வெளியேறினர். இதனால் கடந்த ஒரு வாரமாக பரபரப்பாக காணப்பட்ட தாணிப்பாறை, இன்று பக்தர்கள் இன்றி காணப்பட்டது.