சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே ராஜாக்காப்பட்டி தீத்தாம்பட்டி அங்காளபரமேஸ்வரி, பெருமாள், பேச்சியம்மாள், ஆஞ்சநேயர், பட்டவர், ஆகிய சாமிகள் கோவில் திருவிழா நடந்தது.
5 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்த திருவிழா இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் 17 வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் முதல் நாள் விழாவில் திண்டுக்கல் அருகே உள்ள பித்தளைபட்டி குடகனாற்றில் இருந்து சாமியின் திருப்பெட்டியை நன்நீராட்டி பாதயாத்திரையாக தீத்தாம்பட்டி கிராமத்தில் உள்ள கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. இதனை தொடர்ந்து 2 நாள் திருவிழாவில் ஊரின் இளைஞர்கள் சுமார் 20 மேற்பட்டவர்கள் கையில் அக்கினி சட்டி பிரத்தனை செய்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அக்கினி சட்டி பிரத்தனை கண்டு ரசித்தனர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகள் நடந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.