காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், யதோக்தகாரி சுவாமி கோவிலில், பொய்கை ஆழ்வார் திரு அவதார உற்சவம், வரும் 14ம் தேதி துவங்குகிறது.அன்று முதல், 23ம் தேதி வரை, 10 நாட்கள் உற்சவம் நடைபெறும். தினமும் காலை 10 மணிக்கு, ஆழ்வாருக்கு திருமஞ்சனம், மாலை 5:30 மணிக்கு ஆழ்வார் புறப்பாடு, இரவு 6:30 மணிக்கு சாற்றுமறை நடைபெறும். அத்துடன் தினமும் இரவு 7 மணியிலிருந்து 8:30 மணி வரை, நவராத்திரி உற்சவம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் பரம்பரை நிர்வாக தர்மகர்த்தா நல்லப்பா நாராயணன் செய்துள்ளார்.