துதிக்கை மூலம் மவுத் ஆர்கன் வாசிக்கும் நெல்லையப்பர் கோவில் யானை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஆக 2023 03:08
திருநெல்வேலி : திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி 53.
கோவில் விழாக்களில் வீதி உலா வருவது, தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க செல்வது என திருநெல்வேலியின் செல்லப்பிள்ளையாக திகழ்கிறது. ஓராண்டுக்கு முன் யானையின் எடை 4 ஆயிரத்து 450 கிலோ இருந்தது. டாக்டர்களின் ஆலோசனைக்கு பிறகு தினமும் 3 மணி நேரம் நடை பயிற்சி, நீச்சல் குளம் பயிற்சியால், தற்போது 300 கிலோ எடை குறைந்துள்ளது. பாகன்கள் ராமதாஸ், விஜயகுமார் முயற்சியில் மாலையில் யானை, துதிக்கை மூலம் மவுத் ஆர்கன் வாசித்து கோயில் வசந்த மண்டபத்தை இசை மயமாக்குகிறது.